நைஜிரியாவை சேர்ந்த 51 பேர், இஸ்லாமிய மத நிகழ்வு ஒன்றுக்கு மாலி சென்று விட்டு திரும்பிய போது எதிர்பாராதவிதமாக அவர்களின் லாரி பழுதாகி நின்றுள்ளது. இதனிடையே ஓட்டுநரும், பயணிகளும் எவ்வளவு போராடியும் வாகனத்தை சரிசெய்ய முடியாத நிலையில், அவர்கள் கையில் வைத்திருந்த அத்தியாவசிய உணவு மற்றும் குடிநீரும் தீர்ந்துபோனதால், மாற்று உதவியும் கிடைக்காமல் சகாரா பாலைவனத்தின் கொளுத்தும் வெயிலில் சிக்கி கொண்டனர்.
இந்த நிலையில், கடும் வெப்பத்தால் துடிதுடித்து பரிதாபமாக 49 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இரண்டு பயணிகள் மட்டும், தங்களின் தாகத்தையும் வெயிலையும் தாங்கிக்கொண்டு சுமார் 50 கிலோமீட்டருக்கும் மேல் பாலைவன மணலில் நடந்து சென்று ஒரு நீர்நிலையை கண்டுபிடித்து உயிரை காத்து கொண்டதுடன், இந்த துயர செய்தியை அதிகாரிகளிடம் கொண்டு சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில் தாகத்தோடவே தண்ணிர் இல்லாமல் சகாரா பாலைவனத்தில் 49 பேர் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். மீட்கப்பட்ட 49 பேரின் உடல்களும் அங்கேயே ஒரு பொது புதைகுழியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக நைஜர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தற்பொழுது சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.




