அண்ணாமலை தொடங்கிய புதிய இயக்கம் – 7 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் எண்ணிக்கை!

அண்ணாமலை இயக்கத்தில் இணைவோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ளது.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றதாக பொதுச்செயலாளர் அர்ஜூன் சிங் அறிவித்தார். மேலும் பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகும் அண்ணாமலையின் முடிவும் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை சமூக வலைதளம் மூலம் நேரலையில் பேசினார்.

அப்போது, அவர் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கப் போவதாக அறிவித்தார். மேலும் அவர் தனது கட்சி பொதுத்தேர்தலில் போட்டியிடும் என அறிவித்தார். இதனை தொடர்ந்து அண்ணாமலை அரசியல் கட்சியை தொடங்கியது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு தனது இயக்கத்தில் சேர்வதற்கான இணையதள முகவரியையும் தெரிவித்தார்.

அதில் உடனடியாக பலரும் சேர தொடங்கினார்கள். மதியம் 1 மணி வரையில் 1½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிலையில், மாலை 6 மணி வரையில் ஆன்லைன் மூலம் அண்ணாமலை இயக்கத்தில் இணைவோர் எண்ணிக்கை 7 லட்சத்தை (7,23,449) தாண்டியுள்ளது. http://www.wetheleader.org இணையதளத்தில் தங்கள் பெயர், மொபைல் எண்ணை பதிவு செய்து பலர் உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.