அரவக்குறிச்சி தொகுதியில் வாக்கு சேகரிப்பின் போது, பாஜக வேட்பாளார் அண்ணாமலை மற்றும் காயத்ரி ரகுராம் பொதுமக்களுடன் உற்சாகமாக நடனமாடினர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும் தமிழ்நாடு பாஜக துணை தலைவருமான அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருக்கு ஆதரவாக தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் வாக்கு சேகரித்தார். பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, பொதுமக்களுடன் இணைந்து காயத்ரி ரகுராம் மற்றும் அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை உற்சாகமாக நடனமாடினர்.







