கரூரை மாநகராட்சியாக மாற்றுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி!

கரூரை, மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வேட்பாளரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். கருர் நகராட்சிக்கு உட்பட்ட திட்டசாலை, அம்மன் நகர், அறிவொளி நகர், விவிஜி நகர் உள்ளிட்ட…

கரூரை, மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வேட்பாளரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கருர் நகராட்சிக்கு உட்பட்ட திட்டசாலை, அம்மன் நகர், அறிவொளி நகர், விவிஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய விஜயபாஸ்கர், கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கரூர் நகர் முழுவதும் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறி வாக்கு சேகரித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.