முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

பரினீதி சோப்ரா நடிப்பில் வெளியான ’சாய்னா’ திரைப்படம்!

பரினீதி சோப்ரா நடிப்பில் சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’சாய்னா’இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அமோல் குப்தா இயக்க, அமல் மாலிக் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சாய்னா நேவாலின் கதாபாத்திரத்தில் பரினீதி நடிக்கிறார். முதலில் சாய்னா நேவாலின் கதாபாத்திரத்தில் சிரத்தா கபூர் நடிப்பதாக ஒப்பந்தமானார். படப்பிடிப்பும் தொடங்கியது. ஆனால் சிரத்தா கபூருக்கு டெங்குகாய்ச்சல் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக பரினீதி சோப்ரா இக்கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்நிலையில் இத்திரைப்படம் இன்று வெளியானது. பரினீதி சோப்ராவின் சகோதரியான ப்ரியங்கா சோப்ரா தனது தங்கையைக் குறித்து பெருமை கொள்வதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் படத்தை பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

பண மோசடி புகார்; காவல் ஆணையரை சந்தித்தார் நடிகர் ஆர்யா

Saravana Kumar

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்

Vandhana

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: பேட்டிங்கை தேர்வு செய்தது நியூசிலாந்து

Halley karthi