”மக்கள் வரிப்பணம் தனியார் பணமாக மாறியிருப்பதை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் காண்பிக்கிறது!” – அண்ணாமலை பேட்டி

மக்கள் வரிப்பணம் தனியார் பணமாக மாறியிருப்பதை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் காண்பிக்கிறது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் மைய குழு கூட்டம் நடைப்பெற்றது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த…

மக்கள் வரிப்பணம் தனியார் பணமாக மாறியிருப்பதை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் காண்பிக்கிறது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் மைய குழு கூட்டம் நடைப்பெற்றது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால்
சென்னை முழுவதும் போராட்டக்களமாக மாறியுள்ளதாக தெரிவித்தார்.

காவேரி விவகாரம் குறித்து தமிழக சட்டமன்ற தீர்மானம் ஒருதலைபட்சமானது என கூறினார். திமுகவின் ஆட்சி காலத்தில் செய்த தவறுகளை மக்களுக்கு சுட்டிகாட்ட உள்ளதாகவும், நாடாளுமன்ற தேர்தலுக்கு காலம் உள்ளதால் கூட்டணி குறித்தும் வேட்பாளர்கள் குறித்தும் பிறகு பேசப்படும் என தெரிவித்தார்

மக்கள் வரிப் பணம் தனியார் பணமாக மாறியிருப்பதை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் காண்பிப்பதாக கூறிய அவர்,
தமிழகத்தில் ஊழல் திளைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். நியுஸ் கிளிக் பத்திரிகையில் வெளிநாட்டு பணம் வருவது தொடர்பாகவும் பிபிசி வரி ஏய்ப்பு செய்வது தொடர்பாகவும் சோதனை நடைப்பெறுவதாக தெரிவித்தார்.

2024 மற்றும் 2026 தேர்தல்களை சனதானம் வைத்து எதிர்கொள்ள திமுக தயாரா என கேள்வி எழுப்பிய அவர் சனதானத்தில் உயர்வு தாழ்வு என்பது இல்லை என கூறினார். பாஜக சிறுபான்மையினரின் எதிரான கட்சி இல்லை என்றும் கோயம்புத்தூர் வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகளை விடுதலை செய்ய கூடாது என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.