”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – வடசென்னை பகுதிகளின் கள நிலவரம்

“நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வில் சென்னை மாதவரம், மூலக்கடை உள்ளிட்ட வடசென்னை பகுதிகளின் நிலை குறித்து விரிவாக காணலாம். சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் 3 வழித்தடங்களில், 2…

“நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வில் சென்னை மாதவரம், மூலக்கடை உள்ளிட்ட வடசென்னை பகுதிகளின் நிலை குறித்து விரிவாக காணலாம்.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் 3 வழித்தடங்களில், 2 வழித்தடங்கள் மாதவரத்தில் இருந்து தொடங்குகின்றன. மாதவரம் முதல் சிப்காட் வரை சுமார் 46 கிலோ மீட்டர் தொலைவுக்கு மூலக்கடை செம்பியம் வழியே 19 கிலோமீட்டருக்கு உயர்மட்ட பாலங்கள் மற்றும் 27 கிலோ மீட்டருக்கு சுரங்கத்திலும் செல்லும்படி பணிகள் நடைபெற்று வருகின்றன.

முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடைபெறும் பணிகளால் சாலைகளில் பயணிப்போர் படும் துயரத்தை சொல்லி மாளாது என்கின்றனர் வடசென்னை பகுதி மக்கள்.

மூலைக்கடை வழியாக செல்லும் சாலைகள் குறுகலானதால் கடும் இன்னலுக்கு ஆளாவது ஒரு பக்கம் என்றால், மாதவரத்தில் இருந்து ரெட்டேரி, கோயம்பேடு வழியாக உயர்மட்ட பாலப்பணிகள் காரணமாக, ஆங்காங்கே சாலைகள் தடுக்கப்பட்டு சாலை குறுகலாக ஆக்கப்பட்டதால் இரு சக்கர வாகனங்கள் முதல் பள்ளிக்குச் செல்லும் வாகனங்கள் என அனைவரும் மிகவும் சிரமத்துடனே சென்று வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : நெரிசலில் நெளியும் சென்னை – நியூஸ்7 தமிழின் மெகா கள ஆய்வு!

குறிப்பாக பீக் ஹவர்ஸ் என்று சொல்லக்கூடிய காலை மற்றும் மாலை வேளைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால், வீடு சென்று சேர்வதற்குள் மிகுந்த சோர்வடைந்துவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்தை வரவேற்கும் மக்கள் அதனை கும்மிடிப்பூண்டி வரை விரிவுபடுத்த கோரிக்கை விடுக்கும் அதே நேரத்தில், மக்கள் படும் சிரமங்களை குறைக்க ஒருங்கிணைப்பு அவசியம் என்கின்றனர்.

மேலும் மெட்ரோ ரயில் பணிகளில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த நிறுவனங்கள் சாலைகளில் தூசி பரவாமல் தடுக்க தண்ணீரால் ஈரப்பதம் ஏற்படுத்தி வருவதாகவும், சாலைகள் சேதமானால் அதனை தற்காலிகமாக அடிக்கடி சீரமைப்பதாகவும் மெட்ரோ ரயில் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களிடம் முறையான திட்டமிடல் இல்லாததால், நாள்தோறும் சாலையில் பயணிக்கும் மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர் என்பதுதான் கள நிலவரமாக உள்ளது.

முழு வீடியோவைக் காண : 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.