கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காற்றாலையில் காயமடைந்த மிளா குட்டியை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து காட்டில் விட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காற்றாலையில் காயமடைந்த நிலையில் மிளா குட்டி காணப்பட்டது. உடனே அந்த மிளா குட்டியை வனத்துறையினர் மீட்டு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்து மீண்டும் காட்டில் மிளா கூட்டத்துடன் சேர்த்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் புதுப்பாண்டி வன சரகத்திற்கு உட்பட்ட ஆரல்வாய்மொழியில் உள்ள தனியார் காற்றாலையில் இரவு மிளா குட்டி ஒன்று படுகாயம் அடைந்த நிலையில் இருப்பதாக வனத்துறையினருக்கு வந்த தகவலை அடுத்து வன அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். உடனே அந்த மிளா குட்டியை கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
இதனையும் படியுங்கள்: மூளைசாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்; 9 பேருக்கு மறுவாழ்வு
கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்த பின்னர் அந்த மிளா குட்டி இயல்பு நிலைக்கு திரும்பியதும் காட்டில் தாய் மிளாவுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தாய் மிளா தென்படாததால் மிளா கூட்டத்துடன் அந்த குட்டியை சேர்த்து விட்டனர். குறிப்பிட்ட நேரத்தில் அந்த கூட்டத்துடன் சேர்த்து விட்டதால் துள்ளி குதித்து காட்டினுள் சென்றதாக
வனத்துறையினர் தெரிவித்தனர்.
– யாழன்







