முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வயலில் புகுந்த காட்டு யானைகள்; வாழை மரங்கள்,பயிர்கள் நாசம்

கூடலூர் அருகே உள்ள தேன்வயல் பகுதியில் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் உரைபனி பொழிவு நிலவி வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் காரணமாக வனப்பகுதிகளில் செடி, கொடிகள் கருகி கடும் வறட்சி நிலவி வருவதால் யானைகள் உணவு தேடி குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களின் அருகே உலா வருகின்றன.

இதனையும் படியுங்கள்: ஆட்டிசம் பாதித்த சிறுவனின் அசத்தல் ஓவியம்-வீடியோ வைரல்!

இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள தேன் வயல் பகுதியில் நள்ளிரவு வனப்பகுதியில்
இருந்து வெளியேறிய காட்டு யானைகள் நாராயணன் என்பவருக்கு சொந்தமான விளை
நிலத்திற்குள் புகுந்து வாழை மரங்களை முற்றிலும் சேதப்படுத்தியுள்ளது.

இதனையும் படியுங்கள் : விமான நிறுவனத்திற்கு ChatGPT எழுதிய மின்னஞ்சல் – நெட்டிசன்கள் வியப்பு!

அதேபோல் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பாகற்காய் பந்தல்களை முற்றிலும்
உடைத்து செடிகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் தேன் வயல் பகுதியில் விளை நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வாகன ஓட்டிகளை வழிமறித்து கரும்புத் துண்டுகளை ரசித்து தின்ற கொம்பன் யானைகள்..!

Web Editor

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான வழிகாட்டுதல் குழு: தமிழக அரசு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம்

Web Editor