கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் பொது போக்குவரத்தான பேருந்து சேவை திங்கள் கிழமை முதல் தொடங்க உள்ளதால் விழுப்புரம் கோட்ட பணிமனைகளில் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார்படுத்தும் பணி தீபிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கொரனோ தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களான 24 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்க உத்தவிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரனோ நோய் தொற்று பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் முதல்கட்டமாக 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்கவும் பயணகளின் தேவைக்கேற்ப பேருந்து இயந்துகள் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து அருகிலுள்ள கடலூர், திருவண்ணாமலை, அரியலூர், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
விழுப்புரம் கோட்டத்திலுள்ள 3660 பேருந்துகளில் முதல் கட்டமாக 1500 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.