முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் குறைகிறது கொரோனா தொற்று!

தமிழகத்தில், கொரோனா தொற்று சில நாட்களாகக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரத்து 285 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் 36 ஆயிரத்தைக் கடந்த இந்த தொற்று, இரண்டு மூன்று நாட்களாக குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரத்து 285 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் இதுவரை 19 லட்சத்து 11 ஆயிரத்து 496 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, 3 லட்சத்து 06 ஆயிரத்து 652 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 28 ஆயிரத்து 745 பேர் குணமடைந்து கடந்த 24 மணி நேரத்தில் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 15 லட்சத்து 83 ஆயிரத்து 504 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக, ஒரே நாளில் 468 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை, 21 ஆயிரத்து 340 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 4041 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 88 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர். 4446 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். செங்கல்பட்டில் 1870 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 898 பேருக்கும் திருவள்ளூரில் 1425 பேருக்கும் திருச்சியில் 1110 பேருக்கும் கோவையில் 3632 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!

Halley karthi

சமூக வலைதள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்த தீபிகா படுகோன்!

Jayapriya

சஞ்சு சாம்சன் சரவெடி வீண்: ராஜஸ்தானை வீழ்த்தியது ஐதராபாத்

Ezhilarasan