கரூரில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்: முதல்வர் திறப்பு!

கரூரை அடுத்த புகழூரில் 200 படுக்கைகளுடன் கொரோனோ சிறப்பு சிகிச்சை மையத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். கரூரை அடுத்த புகழூரிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின்…

கரூரை அடுத்த புகழூரில் 200 படுக்கைகளுடன் கொரோனோ சிறப்பு சிகிச்சை மையத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

கரூரை அடுத்த புகழூரிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் சமுதாய கூடத்தில் கொரனோ சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதில் 152 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடனும் 48 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதி இல்லாமலும் நிறுவப்பட்டுள்ளன.

இம்முகாமில் பணியாற்றிட 6 மருத்துவர்கள், 1 செவிலியக் கண்காணிப்பாளர், 10 செவிலியர்கள் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இம்மையத்தினை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

கரூரில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியர் பிர்சாந்த் வடநேரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.