கொடைக்கானலுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்காக இ- பாஸ் பெற்று செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை தடைபட்டதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கொடைக்கானலுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







