தவெக தலைவர் விஜய் தலைமையில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா!

தவெக தலைவர் விஜய் தலைமையில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ‘ப்போர் பாயிண்ட்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்று வருகிறது.

தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இன்று காலை முதலே விழா நடக்கும் இடத்திற்கு தவெக தொண்டர்கள் குவிந்த நிலையில் கியூ.ஆர். அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றுள்ள பொதுமக்களுக்கு தவெக தலைவர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும் விழாவில் பங்கேற்றுள்ள முக்கியஸ்தர்களுக்கு விஜய் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.