வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் வலியுறுத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள குமாரபாளையம் தொகுதியில், அமைச்சர் தங்கமணியை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, முந்தைய திமுக ஆட்சி ஒரு இருண்ட காலம், என்று முதலமைச்சர் விமர்சித்தார். மேலும், அதிமுக ஆட்சியில், தமிழகம் தற்போது மின்மிகை மாநிலமாக திகழ்கிறது என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட வெப்போடை பகுதியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவச வாஷிங் மிஷின் ,வருடத்திற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி வாக்கு சேகரித்தார். அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்ததாகவும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.