தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் குட் பேட் அக்லி பட இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குகிறார்.
நடிப்பு மட்டுமின்றி கார்பந்தயத்திலும் ஆர்வம் உள்ள அஜித் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த கார் பந்தய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த அணி கடந்த ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறது. இதற்கிடையே பிலிப் சாரியட் மோட்டார்ஸ்போர்ட் சார்பில் இந்தாண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருதும் அஜித்துக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் அஜித் தனது மகளுடன் பாலக்காட்டில் உள்ள ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.








