நடிகர் மோகன்லாலின் தாயார் மறைவு…!

மலையாள சினிமா நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். இவரின் தாயார் சாந்தகுமாரி உடல்நலக்குறைவு காரணமாக  மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சாந்தகுமாரி கொச்சியில் உள்ள வீட்டில் இன்று காலமானார். இது கேரள திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாந்தகுமாரியின் மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜய்,  சபாநாயகர் ஏ.என். ஷாம்சீர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் கேரள சினிமா திரையுலக பிரபலங்கள் அவரது வீட்டிற்கு சென்று, அஞ்சலி செலுத்தினர். மோகன்லாலின் தந்தை விஸ்வநாதன் நாயர் கடந்த சில வருடத்திற்கு முன் காலமானார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.