“பொள்ளாச்சி விவகாரத்திற்கு திமுக ஆட்சியில் கடும் தண்டனை வழங்கப்படும்”: மு.க.ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு, ,திமுக ஆட்சியில் கடும் தண்டனை வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 6ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித்…

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு, ,திமுக ஆட்சியில் கடும் தண்டனை வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 6ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், சென்னையில், தாம் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலினுக்கு, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து மு.க ஸ்டாலின், மயிலாப்பூர், தி.நகர், ஆயிரம் விளக்கு ஆகிய பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டதாக கடும் விமர்சனம் செய்தார். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு, ,திமுக ஆட்சியில் கடும் தண்டனை வழங்கப்படும் எனக்கூறிய அவர், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி பெற செய்திட மக்கள் முடிவு செய்துள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.