ஏப்ரல் 6ம் தேதியை மற்ற கட்சியினருக்கு ஏப்ரல் 1ம் தேதியாக மாற்றி விடுங்கள் என பொதுமக்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தொகுதிக்குட்பட்ட ராம் நகர், அண்ணா சாலை, ஆடிஷ் வீதி ஆகிய பகுதிகளில் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், தான் போட்டியிடும் தொகுதியை இந்தியாவே திரும்பிப் பார்க்க வேண்டும் என எண்ணியதாக குறிப்பிட்டார். தனது அரசியல் பிறப்பிடம் கோவை தெற்கு தான் என்றும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏப்ரல் 6 ஆம் தேதியை மற்றவர்களுக்கு ஏப்ரல் ஒன்றாம் தேதியாக மாற்றி விடுங்கள் என சூசகமாக தெரிவித்த கமல்ஹாசன், தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி முதல் அணியாக முன்னேறும் என்றார். மத நல்லிணக்க நகரமாக கோவை மாற வேண்டும் என கூறிய அவர், நேர்மையை பாதுகாப்பது என்பது மக்கள் கையிலும் உள்ளது என தெரிவித்தார்.