முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் Instagram News

தமிழ்நாடு சிறந்து விளங்க சினிமா தான் காரணம்-வெனிசுலா திரைப்பட விழாவில் வருமானவரித்துறை ஆணையர் பேச்சு

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கு சினிமா தான் முக்கிய காரணம். சினிமாவிலிருந்து தான் தமிழ்நாட்டிற்கு 5 முதலமைச்சர்கள் வந்துள்ளார்கள் என வருமானவரித்துறை ஆணையர் ரவி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரான்ஸ் கலாச்சார மையத்தில் 3 நாட்கள் வெனிசுலா திரைப்பட திருவிழா நடைபெறுகிறது. இந்த திரைப்பட திருவிழாவிற்கு கட்டணங்கள் வசூலிக்கப்டுவதில்லை இலவசமாகவே நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இண்டோ- சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி
மாதத்தில் சென்னை சர்வதேச திரைப்பட திருவிழா நடத்தப்படுகிறது. சர்வதேச
திரைப்பட திருவிழாவில் திரையிடப்படாத நாடுகளின் திரைப்படங்களை தனித்தனியாக
அந்தந்த நாடுகளின் திரைப்பட திருவிழாவாக நடத்தப்படுவது வழக்கம்

அந்த வகையில் நேற்று, இன்று மற்றும் நாளை என மூன்று நாட்கள் வெனிசுலா
திரைப்பட திருவிழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரான்ஸ் கலாச்சார
மையத்தில் நடைபெறுகிறது.மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் வெனிசுலா
நாட்டின் புகழ்பெற்ற பல விருதுகளை வாங்கிய 5 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

இதனையும் படியுங்கள்: இந்தியில் ரீமேக் ஆகிறது “லவ் டுடே”-படக்குழு அறிவிப்பு!

இந்த வெனிசுலா திரைப்பட திருவிழா -2023 தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில்
இந்தியாவுக்கான வெனிசுலா தூதர் அல்பிரடோ கல்டரா, வருமான வரித்துறை ஆணையர் ரவி ராமச்சந்திரன் , நடிகை வினோதினி உள்ளிட்டோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

விழாவில் பேசிய வருமான வரித்துறை ஆணையர் ரவி ராமச்சந்திரன் தெரிவித்ததாவது..

” இயல் இசை நாடகம் மூன்றும் சேர்ந்தது தான் சினிமா. அதனால் தான் சினிமா
முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது .சினிமா சக்திவாய்ந்த ஒன்று. நான்
வெனிசுலா படங்களை பார்த்துள்ளேன் அவை மிகுந்த அரசியல் முக்கியத்துவம்
வாய்ந்ததாக இருக்கும்.

வெனிசுலா திரைப்பட திருவிழாவை நடத்த சரியான தேர்வாக தமிழ்நாட்டை தேர்வு
செய்துள்ளீர்கள். தமிழ்நாடு தற்போது அனைத்து துறைகளிலும் சிறந்த வளர்ச்சி அடைந்த மாநிலமாக திகழ்கிறது. அதற்கு முக்கிய காரணம் சினிமா தான். தமிழ்நாட்டிற்கு சினிமாவில் இருந்து மட்டும் 5 முதலமைச்சர்கள் வந்துள்ளார்கள். சினிமா ஒரு சக்திவாய்ந்த துறை”  என கூறினார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் நோட்டீஸ்

G SaravanaKumar

சென்னை: போக்குவரத்து விதிமீறல்கள் அதிநவீன கேமராக்கள் உதவியுடன் கண்டறிந்து வழக்கு பதிவு

EZHILARASAN D

காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் ஒருவர் பலி

Web Editor