”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – அடையார் கள நிலவரம்

சென்னை அடையார் பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதியுறுகின்றனர். சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் ஓசூரில் மழைநீர் வடிகால் பணிகளால், நாள்தோறும் மக்கள் சந்திக்கும்…

சென்னை அடையார் பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதியுறுகின்றனர்.

சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் ஓசூரில் மழைநீர் வடிகால் பணிகளால், நாள்தோறும் மக்கள் சந்திக்கும் இன்னல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற நியூஸ் 7 தமிழ், தற்போது மீண்டும் சென்னையில் இன்று களமிறங்கியுள்ளது.

மெட்ரோ ரயில் பணிகளால் சென்னைவாசிகள் சந்திக்கும் இன்னல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், “நெரிசலில் நெளியும் சென்னை” என்ற தலைப்பில் இன்று ஒருநாள் முழுவதும் பிரமாண்ட களஆய்வை நடத்துகிறது.

இதையும் படியுங்கள் : ”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – மயிலாப்பூர் கள நிலவரமும், மக்களின் கோரிக்கைகளும்

அந்த வகையில் சென்னை அடையாரில், குண்டும் குழியுமான சாலைகளால் நாள்தோறும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. ஐ.டி. நிறுவனங்களின் நுழைவாயிலான அடையாறு, மத்திய கைலாஷ் பகுதிகளில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஒவ்வொரு நாளும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு வழிதடங்கள் மாற்றம் காரணமாகவும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இதுகுறித்த முழு வீடியோவைக் காண :

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.