டி20 உலகக் கோப்பை : அனிருத் இசையமைத்த ”ஃபீல் த த்ரில்” பாடல் வெளியீடு…!

2026 டி20 உலகக் கோப்பைக்காக அனிருத் இசையமைத்துள்ள ”பீல் த த்ரில்” பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது

டி 20 உலக கோப்பை தொடரானது பிப் 7 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறும் இப்போட்டியில் சுமார் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியாவில் நடைபெறும் இத்தொடரில் விளையாட மறுத்ததால், வங்கதேச அணி பதிலாக ஸ்காட்லாந்து அணி தொடரில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2026 டி20 உலகக் கோப்பைக்காக அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்த பாடல் வெளியாகியுள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள இப்படலுக்கு ”பீல் த த்ரில்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹைசன்பர்க் வரிகள் எழுதியுள்ள இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார்.

இந்த பாடலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.