செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள தமிழரசு எனும் “இலக்கிய மலர் 2023” ஐ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இலக்கிய மலர் 2023” என்ற சிறப்பு மலரினை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரதிகளை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் புகழ்பெற்ற ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் “இலக்கிய மலர் 2023” என்ற சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு மாத இதழ், அரசின் சாதனைகள், சமகால இலக்கியங்களைக் வளர்ப்பதில் அரசின் பங்குகளையும் பணிகளையும் எடுத்து கூறும் ஓர் இதழாகும்.
அதன்படி, தமிழ்நாட்டின் இலக்கிய மரபு, பண்பாடு, சமூக வளர்ச்சி போன்றவற்றை எடுத்துச்சொல்லும் விதமாக இந்த இலக்கிய மலரினை அரசு வெளியிட்டு வருகிறது. இளைய தலைமுறையினருக்கு இலக்கிய ஆர்வத்தை ஊட்டும் விதமாக இம்மலரில் நூற்றுக்கணக்கான படைப்பாளர்கள், அரசியல் சிந்தனையாளர்கள், வரலாற்று அறிஞர்கள், மானுடவியல் ஆய்வாளர்கள் ஆகியோர் இப்புத்தகத்திற்கு பஙக்ளிப்பு செய்துள்ளார்கள்.

அறிஞர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், விமர்சகர்கள், ஓவியர்கள் போன்றவர்களின் எழுத்தும், இலக்கியமும், அவர்களின் ஓவியங்களும், கவிதைகளும், கட்டுரைகளும், சிறுகதைகளும் எவ்வாறு படைக்கப்பட்டது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக “இலக்கிய மலர் 2023” உருவாக்கப்பட்டுள்ளதாக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– யாழன்







