புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல் நடத்தினார்.
கடந்த ஜனவரி 30-ம் தேதி 11 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 30 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. செய்தி மக்கள் தொடர்பு இயக்குனராக உள்ள ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் செய்தி மக்கள் தொடர்பு துறையின் இயக்குனராக மாற்றப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுமட்டுமல்லாமல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டார். கூடுதலாக அவருக்கு சிறப்பு திட்ட அமலாக்கத் துறையின் இணை செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. இரண்டு அமைச்சர் உதயநிதியின் இலக்கா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றப்பட்டு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் புதியதாக நியமிக்கப்பட்ட கன்னியாகுமரி ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி, தேனி ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, விழுப்புரம் ஆட்சியர் டாக்டர் சி.பழனி, மயிலாடுதுறை ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேக்கப், திருநெல்வேலி ஆட்சியர் டாக்டர் கா.பா.கார்த்திகேயன், விருதுநகர் ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன், பெரம்பலூர் ஆட்சியர் க.கற்பகம், திருவாரூர் ஆட்சியர் சாருஸ்ரீ, கோயம்புத்தூர் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, தென்காசி ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது.