தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் இயந்திரங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் புதியதாக நிறுவப்பட்டுள்ள நிலக்கரி கையாளும் 2 இயந்திரங்களின் பணிகளை காணொலி வாயிலாக  முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான…

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் புதியதாக நிறுவப்பட்டுள்ள நிலக்கரி கையாளும் 2 இயந்திரங்களின் பணிகளை காணொலி வாயிலாக  முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தை நிர்வகித்து வருகிறது.  தூத்துக்குடி துறைமுகம் தளம் 1ல் புதிதாக நிறுவப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட 2 நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் பணிகள் துவங்கப்பட்டது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தூத்துக்குடி துறைமுகத்தில் புதிய இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, துறையின் செயலாளர், மின்சார வாரியத்தின் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் அதிகப்படியான மின் உற்பத்தி அனல்மின் நிலையங்கள் மூலமாகத்தான்  கிடைக்கப் பெறுகிறது. இதுவரை நிலக்கரியை வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்கின்றனர். தற்போது நிலக்கரி கையாளும் இயந்திரங்களை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழ்நாடு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதற்காக தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்காக அதிக கொள்ளளவில் நிலக்கரியை கையாளும் விதமாக ரூ.325 கோடி செலவில், நிலக்கரி கையாளும் இயந்திரங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நிறுவப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.80 கோடி சேமிக்கப்படும் என அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள்  கீதா ஜீவன், தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்டோரும்  பங்கேற்றனர்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.