முக்கியச் செய்திகள் இந்தியா

உலகிற்கு தீர்வுகளை அளிக்கும் நாடாக இந்தியா மாறி உள்ளது- குடியரசு தலைவர்

உலகிற்கு தீர்வுகளை அளிக்கும் நாடாக இந்தியா மாறி உள்ளதாக நாடாளுமன்ற கூட்டத்தொடரின் குடியரசு தலைவர் உரையில் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அவரது உரையில், இந்த ஆண்டு இந்தியாவிற்கு சிறப்பான ஒரு ஆண்டு. நாம் இந்த ஆண்டு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். இந்தியா தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும் ஆண்டாக இது அமைந்துள்ளது. தன்னிறைவு பெற்ற நாடாக நாம் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறோம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தீர்வுகளை தரும் நாடு இந்தியா

இளைஞர்களும், பெண்களும் முன்னணியில் இருக்க வேண்டிய நிலை என்பது ஏற்பட்டுள்ளது. உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது பெருமளவில் மாறி உள்ளது. வரும் 2047ம் ஆண்டுக்குள் கடந்த காலத்தின் பெருமையுடன் சேர்க்கப்பட்ட நவீன துவாரத்தின் அனைத்து பொன்னான அத்தியாயங்களையும் கொண்ட ஒரு தேசமாக இந்தியாவை நாம் கட்டி எழுப்ப வேண்டும். உலகிற்கு தீர்வுகளை அளிக்கும் நாடாக இந்தியா மாறி உள்ளது.அடுத்த 25 ஆண்டுகள்…

இந்தியா தனது பிரச்சினைகளைத் தீர்க்க மற்ற நாடுகளைச் சார்ந்திருக்காது. மாறாக மற்ற நாடுகள் தங்கள் பிரச்சினைகளுக்கு உதவ இந்தியாவை எதிர்பார்க்கின்றன. அடுத்த 25 ஆண்டுகள் என்பது புதிய இந்தியாவிற்கு மிகவும் சவாலான காலமாக இருக்கும். இந்தியாவின் பெருமைகளை கட்டி எழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.

அரசு ஏழைகளுக்காகவும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. பெண் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. வளர்ச்சியின் முன்னோக்கி செல்வதற்கான தன்னம்பிக்கையை மக்கள் மத்தியில் இந்த அரசு விதைத்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி குறித்த பெரிய கனவுகளை மத்திய அரசு கொண்டுள்ளது.அச்சமற்ற, நிலையான அரசாங்கம்

2047ம் ஆண்டுக்கான அடித்தளம் தற்பொழுது கட்டப்பட்டு வருகிறது. மக்கள் நிலையான அரசாங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். வறுமை இல்லாத, நடுத்தர வர்க்கமும் செழிப்பாக இருக்கும், சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் வழி காட்ட இளைஞர்களும், பெண்களும் முன்னணியில் நிற்கும் இந்தியாவாக இருக்க வேண்டும்.

தீர்க்கமான முடிவு

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது முதல் முத்தலாக் தடைச் சட்டம் வரை பல விஷயங்களில் அரசு தீர்க்கமான முடிவை எடுத்து இருக்கிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் மிகவும் பாராட்டுக்குரியது. கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான ஏழை மக்கள் தடையற்ற உணவை பெற்று வருகின்றனர். ஊழலை ஒழிப்பதற்காக பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. ஜல் ஜீவன், ஹர் கர் ஜல் போன்ற பல திட்டங்கள் நாட்டின் குடிநீர் தொடர்பான பிரச்சனைகளை நீக்கியதுடன் அனைத்து மக்களும் சுகாதாரமான குடிநீரை பெற வழிவகை செய்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருமணத்தை மீறிய உறவு – பெண்ணை வெட்டி கொலை செய்த முதியவர்

G SaravanaKumar

பிரின்ஸ் பட சம்பள வழக்கு; தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

G SaravanaKumar

வாரிசு படம் வெளியாகப் போகும் ஓடிடி தளம் இதுதானா?

G SaravanaKumar