என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ரத்து செய்யவில்லை எனில் வேளாண் பட்ஜெட் அன்று சட்டமன்றம் முன்பு போராட்டம் நடத்துவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள ஆதி பொருளியல் கல்லூரியின் பத்தாம்
ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததாவது..
வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் சில வாட்ஸ்அப் தளங்களில் பொய்யான தகவல் பரவி வருகிறது. இது குறித்து நானும் விசாரித்தேன் அதுபோன்று சம்பவம் நடைபெறவில்லை. பொய்யான வதந்திகளை பரப்பாதீர்கள். வதந்திகளை நம்ப வேண்டாம்.
தமிழ்நாடு வளர்ச்சிக்கு, அனைவரும் தேவை ஆனால் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். என்.எல்.சி நிறுவனம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும். நிலங்களை கையகப்படுத்துவதை ரத்து செய்துவிட்டோம் என்ற அறிவிப்பை முதல்வர் அறிவிக்க வேண்டும்.
முதல்வர் ரத்து என்கிற அறிவிப்பை வெளியிடவில்லை என்றால் கடலூரில் உள்ள
விவசாயிகளை ஒன்று திரட்டி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வுள்ள அன்று, சட்டமன்றம் முன்பு போராட்டம் நடத்துவோம்.
அண்மைச் செய்தி : நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதிமொழியேற்பு!
ஈரோடு இடைத் தேர்தல் குறித்து பேசாமல் இருப்பது நல்லது. தமிழ்நாட்டுக்கு இது ஒரு அவமானம். தேர்தல் ஆணையம் இருக்கிறதா? இல்லையா. இந்த இடைத்தேர்தல் தேவையில்லாதது ஒன்று. இடைத்தேர்தல்லில் வெற்றி பெறவில்லை, அதை வங்கியுள்ளார்கள்.
காலநிலை மாற்றத்திற்கு முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். ஆன்லைன் விளையாட்டால் நேற்று ஒருவர் இறந்துள்ளார், ஆளுநரிடம் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று கடிதம் அளிக்க பட்டு 115 நாட்களாகியும் இதுவரை நடவடிக்கை இல்லை. 115 நாட்களில் 16 நபர்கள் இறந்துள்ளார்கள் இதற்கு
ஆளுநர்தான் பொறுப்பு” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
–யாழன்