தகுதி திறமை இருந்தால் ஓ.பன்னீர்செல்வம் கட்சி தொடங்கி எடப்பாடி பழனிசாமியோடு மோதி பார்க்கட்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு 43,981 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தார்.
இதனிடையே அதிமுக தோல்வி குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், அதிமுக ஈரோடு தேர்தலில் படுதோல்வி அடைந்து இருக்கிறது என்றால் அதற்கு முழுக் காரணம எடப்பாடி பழனிசாமி என்ற நம்பிக்கை துரோகியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் விமர்சனதுக்கு பதிலடி தரும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : அதிமுகவின் தனித்தன்மையை சீர்குலைக்கவும் திமுகவிடம் அடகுவைக்கவும் ஓ.பன்னீர்செல்வம் முயற்சிக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் முறையாக ஒரு வேட்பாளரை நிறுத்த முடியாத காகித புலி. இதுவரை ஓபிஎஸ் பற்றி தவறாக ஒரு வார்த்தைகூட அண்ணன் எடப்பாடியா அவர்கள் சொன்னதில்லை. இவர் செய்த பல்வேறு துரோகங்களை பெரிதுபடுத்தாமல இந்த இயக்கத்தை கட்டிக் காக்கும் தியாக வேள்வியில் ஈடுபட்டு வருகிறார்.
அண்மைச் செய்தி : நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதிமொழியேற்பு!
தகுதி, திறமை இருந்தால் தனிக்கடை துவங்கி எடப்பாடியாருடன் அரசியல் ரீதியாக மோதி பார்க்கட்டும். அதைவிடுத்து, தனி மனித தாக்குதலில் ஈடுபட்டல் கைகட்டி வேடிக்கை பார்க்க உண்மையான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் கோழைகள் அல்ல என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.








