“கோவிலைக் காக்க வந்தோரைத் தாக்கும் திமுக அரசு தூக்கியெறியப்படும்” – நயினார் நாகேந்திரன்!

கோவிலைக் காக்க வந்தோரைத் தாக்கும் திமுக அரசு தூக்கியெறியப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திருப்பூர் மாவட்டம் ராக்கியாபட்டி பகுதியில் உள்ள செல்வ முத்துக் குமாரசாமி திருக்கோவிலை அறிவாலயம் அரசு இடிக்க முயற்சித்ததோடு, அதைத் தடுக்க வந்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்களின் மீதும், பாஜக நிர்வாகிகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

மதச்சார்பின்மை என்னும் போர்வையில் கோவிலைக் காக்க வந்த பக்த கோடிகளைத் தாக்குவது, குன்றத்தில் தீபத்தூணில் தீபமேற்ற மறுப்பது, அறுபடைவீட்டை சுடுகாட்டுடன் ஒப்பிடுவது, திருத்தேரோட்டத்தில் வைத்து பக்தர்களை வசைபாடுவது, கோவிலுக்குச் செல்வதை அநாகரீகம் என்று இழிவுபடுத்துவது, அடிப்படை அறிவின்றி சனாதன தர்மத்தைக் கொடூர நோய்களுடன் ஒப்பிடுவது எனத் தொடர்ந்து இந்து விரோதப் போக்கைக் கைவிடாது தூக்கிப்பிடிக்கும் அறிவாலயம் அரசு தனது இந்து மத வெறுப்பாலேயே மண்ணைக் கவ்வும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.