முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

உலகம் நாகரீகம் அடைவதற்குமுன் ஆடை மட்டுமல்ல அணிகலனும் அணிந்தது தமிழினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உலகம் நாகரீகம் அடைவதற்கு முன்னதாகவே ஆடை  மட்டுமல்ல அணிகலங்களையும் அணிந்தது தமிழினம் அதைத்தான் கீழடி சுட்டிக்காட்டுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக தோள்
சீலை போராட்டத்தில் 200 வது ஆண்டு நிறைவு விழா கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் நாகராஜர் திடலில் நேற்று மாலை நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிகழ்வில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் ஆகிய இரு முதலமைச்சர்கள் ஒரே மேடையில் பங்கேற்றனர். மேலும் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைச் செயலாளர் முத்து வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனையும் படியுங்கள் : வைக்கம் போராட்டத்தின் 100வது ஆண்டுவிழா- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் அழைப்பு

இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது..

தமிழ்நாட்டில் வீரமிகுந்த போராட்டங்களில் ஒன்றுதான் தோள் சீலைப் போராட்டம். தோல் சீலை போராட்டம் குறித்த   அருங்காட்சியகத்தை அண்மையில் நான் திறந்து வைத்தேன். ஆற்றங்கரை நாகரிகத்தின் தலைசிறந்த நாகரிகமாக கீழடி விளங்கி வருகிறது உலகம் நாகரீகம் அடைவதற்கு முன்னதாகவே ஆடை அணிந்து வாழ்ந்தது மட்டுமல்ல அணிகலங்களையும் அணிந்து வாழ்ந்த நாகரீகத்தைக் கொண்டவர்கள் தான் நம் தமிழினம் அதைத்தான் கீழடி சுட்டிக்காட்டுகிறது.

அன்றைய காலத்தில் சாஸ்திர சமுதாயங்கள் என்ற பெயரில் மனிதனை மனிதன் பாகுபடுத்தி உள்ளான். ஆணுக்கு பெண் அடிமைக்காக வைத்து தீண்டாமையை புனிதமாக்கி உள்ளார்கள்.  ஆணுக்கு பெண் அடிமை என்றும் பெண்களை வீட்டில் முடக்கி வைத்து விட்டார்கள். பெண்கள் மார்பில் சேலை அணிய கூடாது அதை மீறி அணிந்தால் பெண்கள் தாக்கப்பட்டார்கள்.

அதைவிட கொடுமையான ஒரு வரி விதிப்பு முலை என்ற வரிவிதிப்பு வரியை கட்ட தவறியதால் தன் மார்பகத்தையே அறுத்து எரிந்த வரலாறு படைத்த பெண்களும் இந்த போராட்டத்தில் மூலம் நமக்கு தெரிய வருகிறது. இந்த வரலாறு இன்றைய இளைய சமுதாயத்திற்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த விழா நடைபெறுகிறது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பத்திரப் பதிவுத் துறையின் சர்வர் பிரச்சினை – விரைந்து தீர்வு காண வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

Web Editor

80 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை 2 மணி நேரமாக போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்!

Jayapriya

அனல்காற்று எச்சரிக்கை: 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டிய வெயில்

எல்.ரேணுகாதேவி