அறத்தையும், அன்பையும் போதித்துச் சமத்துவத்தின் திருவுருவாய் விளங்கியவர் அய்யா வைகுண்டர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அறத்தையும், அன்பையும் போதித்துச் சமத்துவத்தின் திருவுருவாய் விளங்கியவர் அய்யா வைகுண்டர் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அய்யா வைகுண்டரின் பிறந்த நாள் அய்யா வைகுண்டர் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நெல்லை,…

அறத்தையும், அன்பையும் போதித்துச் சமத்துவத்தின் திருவுருவாய் விளங்கியவர் அய்யா வைகுண்டர் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அய்யா வைகுண்டரின் பிறந்த நாள் அய்யா வைகுண்டர் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், கேரளாவிலும் அய்யா வைகுண்டரின் அவதார தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அய்யா வைகுண்டர் கடலிலிருந்து வெளிப்பட்ட தினம் வைகுண்ட அவதார தினமாக ஆண்டுதோறும் மாசி 20-ம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம் . அந்த வகையில் , இந்த ஆண்டு அய்யா வைகுண்டரின் 190-வது அவதார தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனையும் படியுங்கள்: அய்யா வைகுண்டரின் அருள்மொழிகள்!

அய்யா வைகுண்டரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெர்வித்திருப்பதாவது..

”தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் என்றும்; எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே என்றும் அனைவருக்குமான அறத்தையும், அன்பையும் போதித்துச் சமத்துவத்தின் திருவுருவாய் விளங்கிய அய்யா வைகுண்டரின் 191-ஆவது பிறந்தநாளில் அவரைப் போற்றி, அவர் காட்டிய நல்வழி நடக்க உறுதியேற்போம்!”

https://twitter.com/mkstalin/status/1631939906355490816?t=rTZt30BW8A4qdAWGaZKj0g&s=08

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.