முக்கியச் செய்திகள் செய்திகள்

அய்யா வைகுண்டர் அவதார தினம்: தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு வரும் 4-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறையை அறிவித்து தென்காசி ஆட்சியர் துரை ரவிச்சந்திரன்வ உத்தரவிட்டுள்ளார்.

அய்யா வைகுண்டர் கடலிலிருந்து வெளிப்பட்ட தினம் வைகுண்ட அவதார தினமாக ஆண்டுதோறும் மாசி 20-ம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம் . அந்த வகையில் , இந்த ஆண்டு அய்யா வைகுண்டரின் 190-வது அவதார தினம் மார்ச் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக தென்காசி மாவட்டத்தில் அய்யா வைகுண்டர் அவதார தினம் வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறன. இதையொட்டி, மார்ச் 4-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஏற்கனவே அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு மார்ச் 4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். மேலும் நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4-ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 11-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், பள்ளி, கல்லூரிகளில் பொதுத் தேர்வு நடைபெற்றால் விடுமுறை பொருந்தாது என்றும் கூறியிருந்தார்.

இதேபோல் கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளத் குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

யார் இந்த பிபின் ராவத்..?

Arivazhagan Chinnasamy

டி.டி.வி தினகரன் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது: எடப்பாடி பழனிசாமி

Niruban Chakkaaravarthi

ரூ.49.50 கோடி கடன் : கமல்ஹாசன் சொத்து மதிப்பு தெரியுமா?

Halley Karthik