ஐதராபாத்திற்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை…!

ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 180 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்துள்ளது.

சென்னை அணியில் அதிகபட்சமாக டெவால்ட் பிரேவிஸ் 44 ரன்களும், கார்திக சர்மா 32 ரன்களும் விளாசினர்.

ஐதராபாத் அணியில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.