முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

அய்யா வைகுண்டர் அவதார விழா – சென்னையில் பக்தர்கள் ஊர்வலம்

அய்யா வைகுண்டரின் 191வது அவதார விழாவை முன்னிட்டு சென்னையில் பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றனர். 

அய்யா வைகுண்டரின் 191வது அவதார விழாவை முன்னிட்டு சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நாராயண நாயக்கன் தெருவில் உள்ள தங்கக்கிளி திருமண மண்டபத்தில் இருந்து இரட்டை குதிரை பூட்டிய அலங்கரிக்கப்பட்ட வண்டியில், அய்யா அருளிய அகிலத்திரட்டு ஆகமத்தை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருநாமக்கொடி ஏந்தி பாதயாத்திரையாக மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதிக்கு, சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஊர்வலமாகச் சென்றனர்.

இந்த ஊர்வலத்தை சமத்துவ மக்கள் கழக தலைவரும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் மற்றும் கோயில் தலைவர் துரைப்பழம் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதையும் படியுங்கள் : சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு – இருவர் கைது

இந்த ஊர்வலம் நல்லப்ப வாத்தியார் தெரு, ராமானுஜர் தெரு, டி.எச்.ரோடு, மணலி
புதுநகர் வழியாக அய்யா வைகுண்ட தர்மபதியை சென்றடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு செல்லும் வழியில் உபயதாரர்கள் நீர், மோர் வழங்கினர். திருவொற்றியூர் டி.எஸ்.எஸ். நாடார்கள் ஐக்கிய சங்கம் சார்பில் அதன் தலைவர் ஆர்.பி. மனோகரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு காலை உணவு வழங்கப்பட்டது.

ஊர்வலம் தர்மபதியை அடைந்ததும் பகல் பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலையில் ஊஞ்சல் சேவை, தாலாட்டு, சரவிளக்கு, பணிவிடை, அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் வைகுண்ட ஜோதி ஏற்றி இனிமம் வழங்கப்பட்டு விழா நிறைவுபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்க ரூ.1,000 கோடி லஞ்சம்

Mohan Dass

உயர் கல்வி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு; யூஜிசி அறிவிப்பு!

Saravana

செயலிழந்த Google Search என்ஜின் – வெறுப்படைந்த இணையவாசிகள்

Web Editor