அதிமுக உட்கட்சி மோதல்: சி.வி. சண்முகம் தரப்பு அவசர ஆலோசனை…!

அதிமுகவின் சி.வி. சண்முகம் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுகவில் உட்கட்சி மோதலால் எடப்பாடி பழனிசாமி, சி.வி. சண்முகம் என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் இரு தரப்பினரும் சட்டமன்றத்தில் தங்கள் தரப்பினரை கொறடாவாக நியமிக்க வேண்டி சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.

இதனிடையே அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஆலோசானை மேற்கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தற்போது சி.வி. சண்முகம் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சிவி சண்முகம் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவு நிலைபாடுகள் மற்றும் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.