பெரும் மாரடைப்பிலிருந்து உயிர் தப்பியுள்ளதாக பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.
18 வயதில் பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் வென்றவர் சுஷ்மிதா சென். தொடர்ந்து பிரபஞ்ச அழகிப் போட்டியிலும் பங்கேற்று வென்றார். பிரபஞ்ச அழகிப் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பும் அவருக்கு சேர்ந்தது. அழகி அங்கீகாரம் அவரை சினிமாவில் சேர்த்தது. அதன்பிறகு கடைசியாக ஆர்யா என்ற வெப்சீரிஸில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நடிகை சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் கடந்த மார்ச் 2ம் தேதி வெளியிட்ட பதிவில் கூறியிருந்தார். நடிகை சுஷ்மிதா சென் தனது தந்தை சுபீர் சென்னுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாகவும் பலமாகவும் வைத்திருங்கள். அது உங்களுக்கு மிகவும் தேவைப்படும் போது அது உங்களுடன் துணை நிற்கும். இது என் தந்தை சுபிர் சென் சொன்ன புத்திசாலித்தனமான வார்த்தைகள் என்று அந்த பதிவில் கூறியிருந்தார்.
அண்மைச் செய்தி : ”பொய்யான வீடியோக்களை நம்பி ஏமாற வேண்டாம்” – பீகார் அதிகாரி பாலமுருகன்
இன்று மீண்டும் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டுள்ளார். தன்னுடைய மாரடைப்பு குறித்து மேலும் சில தகவல்களை அந்த வீடியோவில் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறுகையில், “நான் பெரும் மாரடைப்பிலிருந்து உயிர் தப்பியுள்ளேன். இதய தமனியில் 95 சதவீதம் அடைப்பு இருக்கிறது. அது ஒரு கட்டம். அது கடந்துவிட்டது. என்னுடைய இதயத்தில் அந்த பயம் விட்டுச்செல்லவில்லை” என்று கூறியுள்ளார்.







