பெங்களூருவில் ’சித்தா’ பட நிகழ்ச்சி – கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதியில் வெளியேறிய நடிகர் சித்தார்த்

பெங்களூருவில் ’சித்தா’ பட நிகழ்ச்சியில் கன்னட அமைப்பினர் புகுந்து முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் நடிகர் சித்தார்த் பாதியில் வெளியேறினார். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து வாட்டாள்  நாகராஜ் தலைமையில் கன்னட ஆதரவு…

பெங்களூருவில் ’சித்தா’ பட நிகழ்ச்சியில் கன்னட அமைப்பினர் புகுந்து முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் நடிகர் சித்தார்த் பாதியில் வெளியேறினார்.

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து வாட்டாள்  நாகராஜ் தலைமையில் கன்னட ஆதரவு அமைப்பினர் வெள்ளிக்கிழமை கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் அம்மாநில விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாண்டியாவிலும் பெங்களூரிலும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில், கர்நாடகா முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த, பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த முழு அடைப்புக்கு கர்நாடகம் முழுதும் ஆயிரத்து 900 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க, மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த, டி.ஜி.பி., அலோக் மோகன் உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் சனிக்கிழமை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக மாநகர காவல்துறை ஆணையர் தயானந்த் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த்தின் சித்தா நடித்த படம் இன்று தமிழ், மலையாளம் மற்றும் கன்னடா உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியானது. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே கர்நாடக மாநில காவிரி போராட்ட குழுவினர் திடீரென உள்ளே புகுந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் பாதிலேயே நடிகர் சித்தார்த் வெளியேறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.