தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையில் வருவாயைப் பெருக்குவதற்கு பல்வேறு அதிரடி செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு, ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் சாதாரண ஏழை மற்றும் நடுத்தர மக்களும் ஏசி பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் மூன்று மாதத்திற்குள் புதிதாக 2000 மின்சார ஏசி பேருந்துகளை வாங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
இந்த மின்சார பேருந்து பல்வேறு வசதிகளுடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் ஒருமுறை பேட்டரி சார்ஜ் ஏற்றினால் சுமார் 300 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும் வகையில் வாங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ டெண்டர் விரைவில் கோரப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




