உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர் மற்றும் 2011 உலகக் கோப்பை சாம்பியன் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைக்கப்பட்டுள்ளார்.
இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை இறுதிக் கட்ட மாற்றங்களுடன் அறிவிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்கனவே காலக் கெடு வழங்கியிருந்தது. இந்த நிலையில் சில மாற்றங்களுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் பட்டியல் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறவுள்ள இலங்கிலாந்து அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் விளையாட சென்ற இந்திய கிரிக்கெட் அணியுடன், ரவிச்சந்திரன் அஸ்வின் பயணம் செய்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் அஸ்வின் இணைக்கப்படாத நிலையில், இடது கை ஆல் ரவுண்டர் அக்ஷார் படேல் காயம் காரணமாக குணமடையாத நிலையில் அஸ்வின் இந்திய அணியில் சேர்கப்பட்டுள்ளார்.
அக்சர் படேல் கை விரல் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதை கருத்தில் கொண்டு, அவர் குணமாக இன்னும் 3 வாரங்களாவது எடுத்துக் கொள்ளக் கூடும் என பிசிசிஐ மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. எனவே அவருக்கு பதில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அஸ்வின் அணியில் இணைக்கப்பட்டதால், 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் அனுபவசாலிகளாக அஸ்வின் மற்றும் விராட் கோலி இந்திய அணியில் உள்ளனர்.







