2019 ஆம் ஆண்டு கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவானார். இதனையடுத்து ட்ராகன், டியூட் என அடுத்தடுத்து 100 கோடி வசூல் அடிக்கும் ஹீரோவாக பிரதீப் ரங்கனாதன் உருவெடுத்தார். கடைசியாக வெளியான அவரது எல்.ஐ.கே திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில் ஹீரோவாக கலக்கி வரும் பிரதீப் ரங்கநாதன் தற்போது தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். அவர் “PR Show” என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதன் முதல் படத்தை சிறப்பு அறிமுக வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.
இந்தப்படத்தில் மமிதா பைஜூ, அஷ்வத் மாரிமுத்து, ஸ்வஸ்திகா உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தை முதல் முறையாக “THE ALPHA UNIT” என்ற 6 பேர் கொண்ட குழு எழுதி இயக்குகிறது. இந்தப் படத்திற்கு வளர்ந்து வரும் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். இதன் அறிமுக வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.




