கன்னியாகுமரியில் மருத்துவ மேற்படிப்பு படித்த மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அம்மாணவியை உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டியதாக பேராசிரியர் பரமசிவம் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் தூத்துக்குடி மாவட்டம் வி ஈ ரோடு பகுதியைச் சேர்ந்த
சிவக்குமார் என்பவரது மகள் சுகிர்தா (27 வயது) மருத்துவம் மேற்படிப்பு பயின்று
வந்தார். கடந்த அக்டோபர் 5ம் தேதி மாணவி சுகிர்தா வகுப்புக்கு செல்லாமல் அறையிலிருந்து உள்ளார். அன்று இரவு அறையிலேயே அவர் உடலை தளர்ச்சி அடைய செய்யும் ஊசியை உடம்பில் செலுத்தி உயிரை மாய்த்துக்கொண்டார்.
இது தொடர்பாக மாணவியின் தந்தை சிவக்குமார் கொடுத்த புகாரி பேரில் குலசேகரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த நிலையில் உயிரிழந்த மாணவி தனது மரணத்திற்கு பேராசிரியர் பரமசிவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர் ஹரிஷ், மாணவி பீரிதி ஆகியோர் தான் காரணம் என எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்நிலையில், போலீசார் ஏற்கனவே மூன்று பேர் மீது 306 பிரிவின் கீழ் வழக்குப்
பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பேராசிரியர் பரமசிவத்தை
குலசேகரத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.







