முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

பிரமாண்டமாக நடைபெறும் வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு . இத்திரைப்படத்திற்கான இசை வெளியிட்டு விழா செப்டம்பர் 2ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் திரைக்கு வரவுள்ள படம் தான் வெந்து தணிந்தது காடு. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களைத் தொடர்ந்து, கவுதம் மேனன் மற்றும் சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தின் மூலம் குஜராத்தி நடிகையான சித்தி இடனானி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். மேலும் சிம்புவுக்கு அம்மாவாக ராதிகா நடித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான இரு பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்படத்தின் டீசர் திரை ரசிகர்களிடம் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவின் அறிவிப்பால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் நிலையில், படக்குழு இசைவெளியீட்டு விழாவைப் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த அரங்குகளின் மாதிரி வடிவம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இவ்விழாவைச் செப்டம்பர் 2ஆம் தேதி சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் கலந்து கொள்வார்கள் எனக் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

படப்பிடிப்பே துவங்காத நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படம் செய்த சாதனை

EZHILARASAN D

தேர்தல் ஆணையத்தில் நாதக புகார் மனு அளித்தது ஏன்? – சீமான் விளக்கம்

G SaravanaKumar

மதநல்லிணக்கத்தை காக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு-அண்ணாமலை

Web Editor