ரஜினியுடன் இணைந்து நடிக்க எப்போதும் தயாராக இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நடைபெற்றது.
அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், “நன்றியைத் தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை, விக்ரம் என்ற குழந்தையை ஜாக்கிரதையாக சேர்க்கவேண்டிய மடியில் கொண்டு போய் சேர்த்து விட்டீர்கள்.பாராட்டுக்களுக்கு தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும். வெற்றி கிடைத்தது போதும் என்று ஒருபோதும் இருந்ததில்லை” என கூறினார்.
நாடு தழுவிய வெற்றியாக விக்ரமுக்கு பாராட்டு கிடைத்துள்ளது எனவும், என்னைப் பொருத்தவரை இந்திய படங்கள் வெற்றி பெறுவதுதான் முக்கியம் என்றும் கூறிய கமல்ஹாசன், “ரஜினியுடன் இணைந்து நடிக்க எப்போதும் தயார்” என்றார்.
கமலை தொடர்ந்து பேசிய படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், “விக்ரம் பட வெற்றி சந்தோசத்தையும் கடந்து ஒரு விதமான பயத்தை கொடுத்துள்ளது. இன்னும் பொறுப்போடு அடுத்த படங்களை இயக்க வேண்டும். இது பத்தாது என்ற எண்ணம் வந்துள்ளது” என கூறினார்.கூடிய விரைவில் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வரும் என்றும் படத்தின் முதல் பாகத்தில் ஒரு வசனம்தான் இருக்கும் என்பதை முன் நின்று வரவேற்றார் கமல் என கூறினார்.







