மீண்டும் இணைந்த சூப்பர் டீலக்ஸ் கூட்டணி………. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு……!

விஜய் சேதுபதி –  தியாகராஜன் குமாரராஜா கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது நாளை வெளியாகிறது.

ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் மற்றும் மார்டன் லவ் சென்னை ஆகிய படங்களை இயக்கிவர் தியாகராஜன் குமாரராஜா. குறைவான படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் தனது தனித்துவத்தால் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விஜய் சேதுபதி –  தியாகராஜன் குமாரராஜா கூட்டணியில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினையும் விஜய் சேதுபதி வென்றார் என்பது குறிப்படத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.