பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 61வது குருபூஜை மற்றும் 116வது ஜெயந்தி விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 61வது குருபூஜை மற்றும் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 61வது…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 61வது குருபூஜை மற்றும் 116வது ஜெயந்தி
விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 61வது குருபூஜை மற்றும் 116வது ஜெயந்தி
விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க
தேவரின் நினைவிடத்திற்கு செல்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

அவருடன் தமிழக அமைச்சர்கள் மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு, பொன்முடி, ஐ.பெரியசாமி, ராஜா கண்ணப்பன், பிடிஆர், கீதா ஜீவன், பெரியகருப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு விருந்தினர் மாளிகைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.

இந்த நிலையில் இன்று காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன்
முத்துராமலிங்கத் தேவரின் வெண்கல திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதன் பின்னர் மதுரை மேலமடை பகுதியில் புதிய மேம்பாலத்திற்கான கொடியசைத்து பணியை துவக்கி வைக்கிறார்.

மேலும் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை
அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அதைத்தொடர்ந்து காரில் ராமநாதபுரம்
மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு சென்று
மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 12 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்து இங்கிருந்து ஏர் இந்தியா விமான மூலம் 12:30 மணிக்கு சென்னை செல்ல உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.