ரஜினி காந்த் மற்றும் கமலஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள். புதிய தலைமுறை நடிகர்கள் வந்த போதிலும் இவர்களின் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு பிரமிக்கத்தக்கதாக உள்ளது.
அண்மையில் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் தனது 173-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த படத்தை ‘டான்’ படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.
இந்த நிலையில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை தயாரிக்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமானது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மெக்கானிக் ஷெட் ஒன்றில் பழைய மாடல் கார் இருப்பது போன்று இடம்பெற்றுள்ளது.
கமலின் பிறந்தநாளான 7 மற்றும் ரஜினியின் பிறந்தநாளான 12 என்பதை குறிக்கும் விதமாக 7.12 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் அடுத்த அறிவிப்பு நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








