” நியூஸ் 7 தமிழின் பணிகள் பிற தொலைக்காட்சிகளும் பின்பற்ற வேண்டிய ஒன்று” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!

நியூஸ் 7 தமிழின் பணிகள் பிற தொலைக்காட்சிகளும் பின்பற்ற வேண்டிய ஒன்று என பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நியூஸ் 7 தமிழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழ் செய்தி…

நியூஸ் 7 தமிழின் பணிகள் பிற தொலைக்காட்சிகளும் பின்பற்ற வேண்டிய ஒன்று என பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நியூஸ் 7 தமிழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நியூஸ் 7 தமிழ் செய்தி தொலைக்காட்சி தமிழ் ஊடக உலகில் முன்னணி ஊடகமாக வலம் வருகிறது. தமிழ் சமூகத்தில் செய்திகளை வழங்கும் பல தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் தனித்துவமான பல புதிய நிகழ்ச்சிகளை நியூஸ் 7 தமிழ் வழங்கி வருகிறது.

வெறுமனே செய்திகளை வாசித்துவிட்டு கடந்து விடாமல் மக்களின் பிரச்னைகளை மக்கள் மன்றத்தில் விவாதித்து அதனை ஆளும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான பல நல்ல தீர்வுகளை பெற்றுத் தந்துள்ளது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி.

நியூஸ் 7 தமிழின் தாரக மந்திரமான ”பொறுப்பும் பொதுநலனும்” என்பதற்கு ஏற்றவாறு பொறுப்புடனும் , பொது நல சிந்தனையோடு செயல்பட்டு வரும் நியூஸ் 7 தமிழ் ஊடக உலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு “பாலின சமத்துவ மாதமாக” அறிவித்து “நிகரென கொள்” எனும் நிகழ்ச்சியை நடத்தியது நியூஸ்7 தமிழ்.

நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம், அறச்சீற்றம், அன்புப் பாலம், வையத் தலைமை கொள், ஃபீனிக்ஸ் மனிதர்கள், நான்ஸ்டாப் 100 போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர்கள் உண்டு. தமிழ் ஊடக உலகில் பிரதான சேனலை தவிர்த்து விளையாட்டு,  விவசாயம், பக்தி , உடல்நலம் என தனித்தனி சேனலை கொண்ட ஒரே தமிழ் ஊடகம் நியூஸ் 7 தமிழ் தான் மட்டும்தான்.

இந்த நிலையில் நியூஸ் 7 தமிழ் 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.  நியூஸ் 7 தமிழின் பத்தாவது ஆண்டிற்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது..

“ பொறுப்போடும் , பொதுநலனோடும் செய்திகளை வழங்கி ஒன்பது ஆண்டுகள் நிறைவு செய்து பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்  நியூஸ் 7 தமிழ்செய்தி தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்.  செய்திகளை முந்தித் தருவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் சமூகத்திற்கு நன்மை பயக்கும் பல நல்ல நிகழ்ச்சிகளை நியூஸ்7 தமிழ் வழங்கி வருவது பாராட்டுக்குரியது.

குறிப்பாக பேரிடர் மற்றும் பெருந்தொற்று காலங்களில் மக்களுக்கு உதவக்கூடிய வகையில் அன்பு பாலம் நிகழ்ச்சி, போதைப் பழங்கங்களுக்கு எதிராக “வேண்டாம் போதை “ விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சிகள் என பிற நியூஸ் 7 தமிழின் பணிகள் பிற தொலைக்காட்சிகளும் பின்பற்ற வேண்டிய ஒன்று. நியூஸ் 7 தமிழின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்” என் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.