டெல்லியின் ஏஐ உச்சிமாநாடு கடந்த 16 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த மாநாடு நாளையுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் இன்று மாநாட்டில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியும் இந்த மாநாட்டில் இன்று பங்கேற்றார். மாநாட்டில் அவர் அடுத்த 7 ஆண்டுகளில் ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது , “ஜியோ எப்படி இணையத் சேவையை மலிவாக்கி புரட்சியை ஏற்படுத்தியதோ, அதேபோல் ஏஐ தொழில்நுட்பத்தையும் ஒவ்வொரு சாமானிய இந்தியருக்கும் மலிவான விலையில் கிடைக்கச் செய்வோம். இந்தியா இனி வெளிநாடுகளிடம் இருந்து தொழில்நுட்பத்தை வாடகைக்கு எடுக்கத் தேவையில்லை. இந்த முதலீட்டின் மூலம் ‘ஜியோ இண்டெலிஜென்ஸ்’ என்ற பெயரில் முக்கியத் திட்டங்களை ரிலையன்ஸ் செயல்படுத்த உள்ளது:
அனைத்து இந்திய மொழிகளிலும் உலகத் தரம் வாய்ந்த ஏஐ திறனை உருவாக்குவதே தங்களின் இலக்கு என்றும், இதற்காக ஸ்டார்ட்-அப்கள் மற்றும் IIT-களுடன் இணைந்து செயல்பட உள்ளது.







