தமிழ்நாடு அரசுக்கும் ரெனால்ட் நிசான் நிறுவனத்திற்கும் இடையே ரூ.5,300 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தெற்கு ஆசியாவில் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசுக்கும், ரெனால்ட் நிஸ்ஸான் நிறுவனத்திற்கும் இடையில் 5,300 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கையெழுத்தானது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஹோட்டல் லீலா பேலஸில் தமிழ்நாடு அரசுக்கும் நிசான் (Nissan) நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்த் நிகழ்வில் தொழில்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஒரகடத்தில் இயங்கி வரும் ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 2000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் விரிவாக்கத்திற்கான பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டு 2025 ஆம் ஆண்டில் ரெனால்ட் நிசான் நிறுவனம் தங்களது சொந்த மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
– யாழன்







