சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனிடையே தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. நேற்று கிராமுக்கு ரூ.350-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 800-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,670-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,09,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்த நிலையில் வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







